🔗

musannaf-abdur-razzaq-21506: 21506

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

التَّسْبِيحُ نِصْفُ المِيزَانِ، وَالْحَمْدُ يَمْلُؤهُ، وَالتَّكْبِيرُ يَمْلأُ مَا بَيْنَ السَّمَاءِ وَالأَرْضِ، وَالصَّوْمُ نِصْفُ الصَّبْرِ، وَالطُّهُورُ نِصْفُ الإِيمَانِ.


21506. ஸுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூயவன் என்று கூறுவது) நன்மையின் தராசில் பாதியை நிரப்பக்கூடியதாகும். அல்ஹம்து லில்லாஹ் (எல்லாப் புகழும் அவனுக்கே உரியது என்று கூறுவது) நன்மையின் தராசு முழுவதையும் நிரப்பக்கூடியதாகும். அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப்பெரியவன் என்று கூறுவது) வானங்கள் மற்றும் பூமிக்கிடையேயுள்ள இடத்தை நிரப்பிவிடக்கூடிய (அளவிற்கு அபரிமிதமான நன்மைகளைக் கொண்ட)தாகும். நோன்பு வைப்பது பொறுமையில் பாதியாகும். தூய்மை இறைநம்பிக்கையில் பாதியாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: பனூஸுலைம் கூட்டத்தைச் சேர்ந்த ஒருவர்.