🔗

musannaf-abdur-razzaq-6427: 6427

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

صَلَّيْتُ مَعَ ابْنِ عَبَّاسٍ عَلَى جِنَازَةٍ فَقَرَأَ فَاتِحَةَ الْكِتَابِ، فَقُلْتُ لَهُ فَقَالَ: «إِنَّهُ مِنْ تَمَامِ السُّنَّةِ أَوْ إِنَّهُ مِنَ السُّنَّةِ»


6427. நான், இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் பின்னால் ஒரு ஜனாஸா தொழுகையில் கலந்து கொண்டேன். அவர்கள் அல்ஹம்து அத்தியாயத்தை சப்தமாக ஓதினார்கள்.

நான் அவர்களிடம் இது பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள் ‘இது முழுமையான நபிவழி என்றோ அல்லது நபிவழியில் உள்ளது என்றோ கூறினார்கள்.

அறிவிப்பவர் : தல்ஹா பின் அப்துல்லாஹ் (ரஹ்)