كَانَ عَبْدُ اللَّهِ إِذَا سَعَى فِي بَطْنِ الْوَادِي قَالَ: «رَبِّ اغْفِرْ وَارْحَمْ إِنَّكَ أَنْتَ الْأَعَزُّ الْأَكْرَمُ»
15565. ஷகீக் பின் ஸலமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் (ஹஜ்ஜின் போது பத்னுல் வாதீ எனும்) பள்ளத்தின் நடுவில் வேகமாகச் செல்லும்போது, “ரப்பிஃக்ஃபிர் வர்ஹம் இன்னக்க அன்(த்)தல் அஅஸ்ஸுல் அக்ரம்” என்று கூறிவந்தார்கள்.
(பொருள்: என் இரட்சகனே! மன்னிப்பாயாக. கிருபை செய்வாயாக. நிச்சயமாக நீயே எல்லோரையும்விட மிக கண்ணியமானவனும், மிக்க கொடை வள்ளலும் ஆவாய்)