إِذَا فَزِعَ أَحَدُكُمْ فِي مَنَامِهِ فَلْيَقُلْ «بِسْمِ اللَّهِ، أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّةِ مِنْ غَضَبِهِ، وَشَرِّ عِقَابِهِ، وَشَرِّ عِبَادِهِ، وَشَرِّ الشَّيَاطِينِ، وَأَنْ يَحْضُرُونِ»
23604. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் தூக்கத்தில் (கனவு கண்டு) திடுக்கிட்டால், “பிஸ்மில்லாஹி, அஊது பி கலிமாத்தில்லாஹித் தாம்மாத்தி மின் ஃகளபிஹீ, வ ஷர்ரி இகாபிஹீ, வஷர்ரி இபாதிஹீ, வஷர்ரிஷ் ஷையாத்தீனி, வ அய் யஹ்ளுருன்’ என்று கூறட்டும்.
(பொருள் : அல்லாஹ்வின் திருப்பெயரால், அல்லாஹ்வின் கோபத்தை விட்டும், அவனின் தீய தண்டனையை விட்டும், அவனின் அடியார்களின் தீமையை விட்டும், ஷைத்தான்களின் தீமையை விட்டும், அவர்கள் என்னிடம் வருவதை விட்டும் அல்லாஹ்வின் பரிப்பூரணமான வார்த்தைகளைக் கொண்டு நான் பாதுகாவல் தேடுகிறேன்!)
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)