بَلَغَ عُمَرُ أَنَّ عَامِلاً لَهُ لاَ يَقِيل، فَكَتَبَ إِلَيْهِ عُمَرُ: قِلْ، فَإِنِّي حُدِّثْتُ أَنَّ الشَّيْطَانَ لاَ يَقِيلُ،
قَالَ مُجَاهِدٌ: إِنَّ الشَّيَاطِينَ لاَ يَقِيلُونَ.
பாடம்: 228
நண்பகல் நேரத்தில் (கைலூலா எனும் தூக்கம்) தூங்குவது பற்றி வந்துள்ளவை.
27195. முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
உமர் (ரலி) அவர்களின் (அரசில் பணிபுரியும்) பணியாளர் ஒருவர் (கைலூலா எனும் தூக்கம்) தூங்குவதில்லை என்ற தகவல் அவர்களுக்கு கிடைத்தது. எனவே, “நீ கைலூலா எனும் தூக்கம் தூங்கிக் கொள்! ஏனெனில் ஷைத்தான் (அவ்வாறு) தூங்கமாட்டான் என்று எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது” என அவருக்கு கடிதம் எழுதி (அனுப்பி)னார்கள்.
முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்:
ஷைத்தான்கள் (கைலூலா எனும் தூக்கம்) தூங்கமாட்டார்கள்.