🔗

முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா: 29858

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

كُنْتُ إِلَى جَنْبِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَفَقَدْتُهُ فَاتَّبَعْتُهُ فَإِذَا هُوَ بِالْبَقِيعِ رَافِعًا يَدَيْهِ يَدْعُو، فَقَالَ: «يَا ابْنَةَ أَبِي بَكْرٍ أَحَسِبْتِ أَنَّ اللَّهَ يَحِيفُ عَلَيْكِ وَرَسُولُهُ، إِنَّ اللَّهَ يَنْزِلُ فِي هَذِهِ اللَّيْلَةِ النِّصْفِ مِنْ شَعْبَانَ فَيَغْفِرُ فِيهَا مِنَ الذُّنُوبِ أَكْثَرَ مِنْ عَدَدِ شَعْرِ مَعْزِ كَلْبٍ»


29858. ஒரு நாள் இரவு இறைத்தூதர் (ஸல்) அவர்களை படுக்கையில் காணவில்லை. (அவர்களைத் தேடி) வெளியில் சென்றேன். அப்போது அவர்கள் ஜன்னத்துல் பகீஃ அடக்கஸ்தலத்திலிருந்தார்கள். (என்னைக் கண்டவுடன்) சொன்னார்கள். (ஆயிஷாவே!) இறைவனும் இறைத்தூதரும் உனக்கு அநீதமிழைத்து விடுவார்கள் என பயந்து போனாயா?

நான் கூறினேன் : (அவ்வாறெல்லாமில்லை) உங்கள் துணைவியர் ஒருவரிடம் வந்திருப்பீர்கள் என்று தான் கருதினேன். அச்சமயம் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மொழிந்தார்கள்: தின்னமாக இறைவன் ஷஃபான்மாதத்தின் 15 ம் இரவின் போது முதல் வானத்திற்கு இறங்கி வருகிறான். மேலும் கல்ப்கூட்டத்தாரின் ஆடுகளின் எண்ணிக்கையைவிட அதிக அளவில் அடியார்களை மன்னிக்கிறான்…

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)