تُوشِكُ الْأُمَمُ أَنْ تَدَاعَى عَلَيْكُمْ كَمَا يَتَدَاعَى الْقَوْمُ عَلَى قَصْعَتِهِمْ , يُنْزَعُ الْوَهْنُ مِنْ قُلُوبِ عَدُوِّكُمْ، وَيُجْعَلُ فِي قُلُوبِكُمْ، وَتُحَبَّبُ إِلَيْكُمُ الدُّنْيَا , قَالُوا: مِنْ قِلَّةٍ؟ قَالَ: أَكْثَرُكُمْ غُثَاءٌ كَغُثَاءِ السَّيْلِ
37247. ஒரு கூட்டம் தங்களது உணவுத் தட்டின் பக்கம் அழைப்பது போல், பிற சமுதாயங்கள், உங்களைக் கொன்றிட (ஒருவர் மற்றொருவரை) அழைத்துக் கொள்வார்கள். அப்போது உங்கள் எதிரிகளின் உள்ளங்களிலிருந்து (உங்களைப் பற்றிய) அச்சம் கழற்றப்பட்டு உங்களுடைய உள்ளங்களில் அவர்களைப் பற்றிய அச்சம் போடப்பட்டிருக்கும். மேலும் அப்போது உங்களுக்கு உலகமே விருப்பமாக ஆக்கப்பட்டிருக்கும் என்று ஸவ்பான் (ரலி) கூறினார்கள். (அவருடன் இருந்தவர்கள்), “அப்போது நாம் எண்ணிக்கை குறைந்தவர்களாக இருப்போமா? என்று கேட்டனர். அதற்கவர்கள், இல்லை. உங்களில் அதிகமானோர் அன்றைய தினம் வெள்ளத்தில் மிதந்து செல்லும் நுரையைப் போன்று ஆகி இருப்பார்கள் என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அம்ர் பின் உபைத்