دَخَلَ ابْنُ عُمَرَ الْمَسْجِدَ وَابْنُ الزُّبَيْرِ مَصْلُوبٌ , فَقَالُوا لَهُ: هَذِهِ أَسْمَاءُ , فَأَتَاهَا وَذَكَّرَهَا وَوَعَظَهَا وَقَالَ: إِنَّ الْجُثَّةَ لَيْسَتْ بِشَيْءٍ وَإِنَّ الْأَرْوَاحَ عِنْدَ اللَّهِ فَاصْبِرِي وَاحْتَسِبِي , فَقَالَتْ: «وَمَا يَمْنَعُنِي مِنَ الصَّبْرِ وَقَدْ أُهْدِيَ رَأْسُ يَحْيَى بْنِ زَكَرِيَّا إِلَى بِغَيٍّ مِنْ بَغَايَا بَنِي إِسْرَائِيلَ»
37328. ஸஃபிய்யா பின்த் ஷைபா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
‘இப்னு உமர் (ரலி) அவர்கள் பள்ளிவாசலுக்குள் வந்தார்கள். அப்போது இப்னுஸ் ஸுபைர் (ரலி) அவர்கள் (ஹஜ்ஜாஜ் பின் யூஸுஃப் என்பவரால்) சிலுவையில் அறையப்பட்டிருந்தார்கள். மக்கள் இப்னு உமர் (ரலி) அவர்களிடம், “இதோ இங்கு அஸ்மா உள்ளார்கள்” என்று கூறினார்கள். உடனே இப்னு உமர் (ரலி) அவர்கள் அஸ்மா (ரலி) அவர்களிடம் சென்று, “நிச்சயமாக இந்த உடல் ஒரு பொருட்டல்ல. உயிர்கள் அல்லாஹ்விடம் உள்ளன. ஆகவே, பொறுமையாக இருங்கள்; நன்மையை எதிர்பாருங்கள்” என்று அவர்களுக்கு நினைவூட்டி, உபதேசம் செய்தார்கள்.
அப்போது அஸ்மா (ரலி) அவர்கள், “யஹ்யா பின் ஸகரிய்யா (அலை) அவர்களின் தலை பனூ இஸ்ராயீலின் விலைமாதர்களில் ஒரு விலைமாதுவுக்கு அன்பளிப்பாகக் கொடுக்கப்பட்டதே! எனக்கு ஏன் பொறுமை இருக்காது?” என்று கூறினார்கள்.