أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُولُ فِي سُجُودِ الْقُرْآنِ: «سَجَدَ وَجْهِي لِلَّذِي خَلَقَهُ وَصَوَّرَهُ، وَشَقَّ سَمْعَهُ وَبَصَرَهُ بِحَوْلِهِ وَقُوَّتُهِ»
பாடம்:
குர்ஆன் ஓதலுக்கான ஸஜ்தாவில் ஓதவேண்டியவை.
4372. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஸஜ்தா வசனங்களை ஓதி ஸஜ்தாச் செய்யும்போது, “ஸஜத வஜ்ஹீ லில்லதீ கலக்கஹூ, வ ஸவ்வரஹூ, வஷக்க ஸம்அஹூ வ பஸரஹூ பி ஹவ்லிஹீ வ குவ்வத்திஹீ” என்று கூறுவார்கள்.
(பொருள்: என் முகத்தைப் அழகாக படைத்து, அதில் தனது அறிவாலும் ஆற்றலாலும் செவிப்புலனையும் பார்வைத் திறனையும் ஏற்படுத்திய (இறை)வனுக்கு என் முகம் பணிகிறது.)