أَتَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَسْجِدَ بَنِي الْأَشْهَلِ فَصَلَّى بِهِمِ الْمَغْرِبَ، فَلَمَّا سَلَّمَ قَالَ: «ارْكَعُوا هَاتَيْنِ الرَّكْعَتَيْنِ فِي بُيُوتِكُمْ»
قَالَ: فَلَقَدْ «رَأَيْتُ مَحْمُودَ بْنَ لَبِيدٍ وَكَانَ إِمَامَ قَوْمِهِ يُصَلِّي بِهِمِ الْمَغْرِبَ، ثُمَّ يَخْرُجُ فَيَجْلِسُ بِفِنَاءِ الْمَسْجِدِ حَتَّى يَقُومَ قَبْلَ الْعَتَمَةِ، فَيَدْخُلَ بَيْتَهُ فَيُصَلِّيهِمَا»
6373. மஹ்மூத் பின் லபீத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், பனூ அப்துல்அஷ்ஹல் குலத்தாரின் பள்ளிவாசலுக்கு வந்தார்கள். அப்போது அவர்களுக்கு ‘மஃக்ரிப்’ தொழுகை தொழவைத்தார்கள். அவர்கள், ஸலாம் கூறி தொழுகையை நிறைவு செய்தபோது, “(மஃக்ரிப் தொழுகையின்) இந்த இரண்டு ரக்அத் (பின் சுன்னத்) தொழுகையை உங்கள் வீடுகளில் தொழுங்கள்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆஸிம் பின் உமர் (ரஹ்)
ஆஸிம் பின் உமர் (ரஹ்) கூறுகிறார்:
மஹ்மூத் பின் லபீத் (ரலி) அவர்கள், தனது மக்களுக்கு மஃக்ரிப் தொழுகை நடத்தியப் பின் எழுந்துச் சென்று பள்ளிவாசலின் வராண்டா பகுதியில் உட்காருவார்கள். பிறகு, இஷாத் தொழுகை நேரம் வருவதற்கு முன் எழுந்துச் சென்று தனது வீட்டில் மஃக்ரிப் தொழுகையின் பின் சுன்னத் தொழுகையை தொழுவார்கள். இதை (நான் நேரடியாக) பார்த்துள்ளேன்.