🔗

முஸ்லிம்: 1014

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا قَعَدَ فِي الصَّلَاةِ، جَعَلَ قَدَمَهُ الْيُسْرَى بَيْنَ فَخِذِهِ وَسَاقِهِ، وَفَرَشَ قَدَمَهُ الْيُمْنَى، وَوَضَعَ يَدَهُ الْيُسْرَى عَلَى رُكْبَتِهِ الْيُسْرَى، وَوَضَعَ يَدَهُ الْيُمْنَى عَلَى فَخِذِهِ الْيُمْنَى، وَأَشَارَ بِإِصْبَعِهِ»


பாடம்: 22

தொழுகையில் (அத்தஹிய்யாத்) அமர்வில் உட்காரும் முறையும், அப்போது தொடைகள் மீது இரு கைகளை வைக்கும் முறையும்.

1014. அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையில் (அத்தஹிய்யாத்) அமர்வில் உட்காரும்போது, (தவர்ருக் முறையில் அதாவது) “தமது இடது பாதத்தை (வலது)தொடைக்கும் கணுக்காலுக்கும் இடையே (அவற்றுக்குக் கீழே) வைத்து, வலது பாதத்தை விரித்து (படுக்க) வைப்பார்கள்”.

தமது இடக் கையை இடது கால் மூட்டின் மீதும், வலக் கையை வலது தொடையின் மீதும் வைத்துத் தமது (ஆட்காட்டி) விரலால் சைகை செய்வார்கள்.

அத்தியாயம்: 5