🔗

முஸ்லிம்: 113

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«لَا تَرْغَبُوا عَنْ آبَائِكُمْ، فَمَنْ رَغِبَ عَنْ أَبِيهِ فَهُوَ كُفْرٌ»


பாடம் : 27

தெரிந்துகொண்டே தன் தந்தையை வெறுத்து (வேறொருவரை தன் தந்தை என்று கூறி)விடுகின்றவனது இறை நம்பிக்கையின் நிலை.

113. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்கள் தந்தையரை நீங்கள் வெறுக்காதீர்கள். யார் தம் தந்தையை வெறுத்து (வேறொருவரைத் தம் தந்தை என்று கூறி)விடுகின்றாரோ அவர் நன்றி கொன்றவர் (காஃபிர்) ஆவார்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

Book : 1