🔗

முஸ்லிம்: 129

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

أَنَّهُ قَالَ فِي الْأَنْصَارِ: «لَا يُحِبُّهُمْ إِلَّا مُؤْمِنٌ، وَلَا يُبْغِضُهُمْ إِلَّا مُنَافِقٌ، مَنْ أَحَبَّهُمْ أَحَبَّهُ اللهُ وَمَنْ أَبْغَضَهُمْ أَبْغَضَهُ اللهُ» قَالَ شُعْبَةُ: قُلْتُ لِعَدِيٍّ: سَمِعْتَهُ مِنَ الْبَرَاءِ؟، قَالَ: إِيَّايَ حَدَّثَ


129. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அன்சாரிகள் தொடர்பாக நபி (ஸல்) அவர்கள் கூறுகையில், “இறைநம்பிக்கையாளரைத் தவிர வேறெவரும் அவர்களை நேசிக்கமாட்டார்கள்; நயவஞ்சகனைத் தவிர வேறெவரும் அவர்களை வெறுக்கமாட்டார்கள். யார் அவர்களை நேசிக்கிறார்களோ அவர்களை அல்லாஹ்வும் நேசிக்கிறான். யார் அவர்களை வெறுக்கிறார்களோ அவர்களை அல்லாஹ்வும் வெறுக்கிறான்” என்று குறிப்பிட்டார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஷுஅபா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: நான் (இதை எனக்கு அறிவித்த) அதீ பின் ஸாபித் (ரஹ்) அவர்களிடம், “இதை பராஉ (ரலி) அவர்களிடமிருந்தா செவியுற்றீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “(ஆம்;) எனக்குத்தான் அவர்கள் அறிவித்தார்கள்” என்று பதிலளித்தார்கள்.

Book : 1