🔗

முஸ்லிம்: 135

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

سُئِلَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَيُّ الْأَعْمَالِ أَفْضَلُ؟ قَالَ: «إِيمَانٌ بِاللهِ»، قَالَ: ثُمَّ مَاذَا؟ قَالَ: «الْجِهَادُ فِي سَبِيلِ اللهِ» قَالَ: ثُمَّ مَاذَا؟ قَالَ: «حَجٌّ مَبْرُورٌ»،

وَفِي رِوَايَةِ مُحَمَّدِ بْنِ جَعْفَرٍ قَالَ: «إِيمَانٌ بِاللهِ وَرَسُولِهِ» وَحَدَّثَنِيهِ مُحَمَّدُ بْنُ رَافِعٍ، وَعَبْدُ بْنُ حُمَيْدٍ، عَنْ عَبْدِ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ بِهَذَا الْإِسْنَادِ مِثْلَهُ


பாடம் : 36

அல்லாஹ்வை நம்பிக்கைகொள்வதே (நற்)செயல்களில் மிகவும் சிறந்ததாகும்.

135. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் “(நற்)செயல்களில் சிறந்தது எது?” என்று கேட்கப் பட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வை நம்பிக்கை கொள்வது” என்று கூறினார்கள். “பிறகு எது (சிறந்தது)?” என்று கேட்கப்பட்டபோது, “அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிவது” என்றார்கள். “பிறகு எது (சிறந்தது)?” எனக் கேட்கப்பட்டபோது, “(பாவச் செயல் எதுவும் கலவாத) ஒப்புக்கொள்ளப்பட்ட ஹஜ்” என்று பதிலளித்தார்கள்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் முஹம்மத் பின் ஜஅஃபர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் (“அல்லாஹ்வை நம்பிக்கைகொள்வது” எனும் இடத்தில்) “அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நம்பிக்கைகொள்வது” என்று இடம்பெற்றுள்ளது.

Book : 1