🔗

முஸ்லிம்: 153

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

أَتَانِي جِبْرِيلُ عَلَيْهِ السَّلَامُ فَبَشَّرَنِي أَنَّهُ مَنْ مَاتَ مِنْ أُمَّتِكَ لَا يُشْرِكُ بِاللهِ شَيْئًا دَخَلَ الْجَنَّةَ، قُلْتُ: وَإِنْ زَنَى وَإِنْ سَرَقَ؟ قَالَ: وَإِنْ زَنَى وَإِنْ سَرَقَ


153. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என்னிடம் (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து “உங்கள் சமுதாயத்தாரில் யார் அல்லாஹ்வுக்கு எதையும் இணையாக்காமல் இறந்துவிடுகிறாரோ அவர் நிச்சயமாகச் சொர்க்கம் செல்வார்” என்று நற்செய்தி கூறினார். உடனே நான், “அவர் விபசாரம் செய்தாலும் திருடினாலுமா?” என்று கேட்டேன். அதற்கு ஜிப்ரீல் “விபசாரம் செய்தாலும் திருடினாலும் சரியே” என்று பதிலளித்தார்.

இதை அபூதர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

Book : 1