«مَا حَفِظْتُ ق، إِلَّا مِنْ فِي رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَخْطُبُ بِهَا كُلَّ جُمُعَةٍ»، قَالَتْ: وَكَانَ تَنُّورُنَا وَتَنُّورُ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَاحِدًا
1581. ஹாரிஸா பின் நுஅமான் (ரலி) அவர்களின் புதல்வியார் கூறியதாவது:
நான் ‘காஃப்” எனும் (50ஆவது) அத்தியாயத்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வாயிலிருந்தே (அவர்களிடமிருந்து நேரடியாகவே) மனனமிட்டேன். அவர்கள் ஒவ்வொரு ஜுமுஆ (சொற்பொழி)வின்போதும் அந்த அத்தியாயத்தை ஓதுவார்கள். நாங்களும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் ஒரே அடுப்பையே பயன்படுத்திவந்தோம். (அந்த அளவிற்கு அவர்களும் நாங்களும் அக்கம் பக்கத்தில் குடியிருந்தோம்.)
Book : 7