«خَرَجَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى الْمُصَلَّى، فَاسْتَسْقَى، وَحَوَّلَ رِدَاءَهُ حِينَ اسْتَقْبَلَ الْقِبْلَةَ»
அத்தியாயம் – 9
மழைத் தொழுகை
1626. அப்துல்லாஹ் பின் ஸைத் அல் மாஸினீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகைத்திடலுக்குப் புறப்பட்டுச் சென்று மழைவேண்டி(த் தொழுகை நடத்தி)னார்கள். (திடலில்) கிப்லாவை நோக்கித் திரும்பி நின்ற போது, தமது மேல்துண்டை மாற்றிப் போட்டுக் கொண்டார்கள்.
Book : 9