«إِذَا رَأَيْتُمُ الْجَنَازَةَ، فَقُومُوا لَهَا، حَتَّى تُخَلِّفَكُمْ أَوْ تُوضَعَ»
பாடம் : 24
ஜனாஸாவைக் கண்டு எழுந்து நிற்றல்.
1744. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பிரேதத்தைக் கண்டால் அது “உங்களைக் கடந்து செல்லும்வரை” அல்லது “(கீழே) வைக்கப் படும்வரை” அதற்காக எழுந்து நில்லுங்கள்.
இதை ஆமிர் பின் ரபீஆ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
Book : 11