🔗

முஸ்லிம்: 1761

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

أَنَّ سَعْدَ بْنَ أَبِي وَقَّاصٍ، قَالَ: فِي مَرَضِهِ الَّذِي هَلَكَ فِيهِ: «الْحَدُوا لِي لَحْدًا، وَانْصِبُوا عَلَيَّ اللَّبِنَ نَصْبًا، كَمَا صُنِعَ بِرَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»


பாடம்: 29

உட்குழியும் பிரேதத்தின் மீது செங்கற்களை அடுக்குவதும்.

1761. ஆமிர் பின் ஸஃத் பின் அபூவக்காஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(என் தந்தை) ஸஃத் பின் அபூவக்காஸ் (ரலி) அவர்கள் எந்த நோயில் இறந்துபோனார்களோ அந்த நோயில் இருந்தபோது, “(நான் இறந்ததும்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்காகச் செய்யப்பட்டதைப் போன்று, (குழியினுள்) எனக்காக உட்குழியொன்றை வெட்டுங்கள்; என்மீது நன்கு செங்கற்களை அடுக்கிவையுங்கள்!” என்று சொன்னார்கள்.

அத்தியாயம்: 11