لَمَّا نَزَلَتْ هَذِهِ الْآيَةُ: {وَعَلَى الَّذِينَ يُطِيقُونَهُ فِدْيَةٌ طَعَامُ مِسْكِينٍ} [البقرة: 184] كَانَ مَنْ أَرَادَ أَنْ يُفْطِرَ وَيَفْتَدِيَ، حَتَّى نَزَلَتِ الْآيَةُ الَّتِي بَعْدَهَا فَنَسَخَتْهَا
பாடம் : 25
“நோன்பு நோற்கச் சக்தி பெற்றவர்கள் (நோற்காமல் விட்டுவிட்டால்) அதற்குப் பரிகாரமாக ஓர் ஏழைக்கு உணவளிப்பது கடமையாகும்” எனும் (2:184ஆவது) இறைவசன(த்தின் சட்ட)ம், “உங்களில் (ரமளான் எனும்) அந்த மாதத்தை அடைந்தவர் அதில் நோன்பு நோற்கட்டும்” எனும் (2:185ஆவது) வசனத்தின் மூலம் மாற்றப்பட்டுவிட்டது என்பதன் விளக்கம்.
2104. சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:
“நோன்பு நோற்பதற்குச் சக்தி உள்ளவர்கள் (நோன்பு நோற்காமல் விட்டுவிட்டால்) அதற்குப் பரிகாரமாக ஓர் ஏழைக்கு உணவளிக்கவேண்டும்” எனும் இந்த (2:184ஆவது) வசனம் அருளப்பெற்றபோது, நாடியவர் நோன்பு நோற்காமல் விட்டுவிட்டுப் பரிகாரம் செய்துவந்தார். பின்னர் இதை மாற்றி இதற்குப் பின்னுள்ள (“உங்களில் அந்த மாதத்தை அடைந்தவர் அதில் நோன்பு நோற்கட்டும்”என்ற 2:185ஆவது) வசனம் அருளப்பெற்றது.
Book : 13