«نَهَى رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَلْبَسَ الْمُحْرِمُ ثَوْبًا مَصْبُوغًا بِزَعْفَرَانٍ أَوْ وَرْسٍ»
وَقَالَ: «مَنْ لَمْ يَجِدْ نَعْلَيْنِ، فَلْيَلْبَسِ الْخُفَّيْنِ وَلْيَقْطَعْهُمَا أَسْفَلَ مِنَ الْكَعْبَيْنِ»
2190. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
“இஹ்ராம்” கட்டியவர் குங்குமப்பூ மற்றும் “வர்ஸ்” ஆகிய வாசனைச் செடிகளின் சாயம் இடப்பட்ட ஆடையை அணியக் கூடாது என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள். மேலும், “(“இஹ்ராம்” கட்டியிருக்கும்போது) காலணிகள் கிடைக்காதவர், காலுறைகள் அணியட்டும்; காலுறைகளைக் கணுக்கால்களுக்குக் கீழே இருக்கும்படி கத்தரித்துக் கொள்ளட்டும்” என்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.
Book : 15