🔗

முஸ்லிம்: 2226

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«كَأَنِّي أَنْظُرُ إِلَى وَبِيصِ الطِّيبِ فِي مَفْرِقِ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ مُحْرِمٌ»، وَلَمْ يَقُلْ خَلَفٌ: وَهُوَ مُحْرِمٌ، وَلَكِنَّهُ قَالَ: وَذَاكَ طِيبُ إِحْرَامِهِ


2226. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “இஹ்ராம்” கட்டியிருந்தபோது, அவர்களது தலை வகிட்டில் நறுமணப் பொருள் ஒளிர்ந்ததை இப்போதும் நான் பார்ப்பதைப் போன்றுள்ளது.

இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில், கலஃப் பின் ஹிஷாம் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் “அவர்கள் “இஹ்ராம்” கட்டியிருந்தபோது” எனும் சொற்றொடர் இடம்பெறவில்லை. அதற்குப் பகரமாக “அது அவர்கள் “இஹ்ராம்” கட்டியபோது பூசிய நறுமணமாகும்” என்று இடம்பெற்றுள்ளது.

Book : 15