🔗

முஸ்லிம்: 2241

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

أَهْدَى الصَّعْبُ بْنُ جَثَّامَةَ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رِجْلَ حِمَارِ وَحْشٍ، وَفِي رِوَايَةِ شُعْبَةَ، عَنِ الْحَكَمِ، عَجُزَ حِمَارِ وَحْشٍ يَقْطُرُ دَمًا. وَفِي رِوَايَةِ شُعْبَةَ، عَنْ حَبِيبٍ، أُهْدِيَ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ شِقُّ حِمَارِ وَحْشٍ فَرَدَّهُ


2241. மேற்கண்ட ஹதீஸ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

அவற்றில் மன்ஸூர் பின் அல்முஅதமிர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் “ஸஅப் பின் ஜஸ்ஸாமா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்குக் காட்டுக் கழுதையின் ஒரு காலை அன்பளிப்பாக வழங்கினார்கள்” என்று காணப்படுகிறது. ஷுஅபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் “ரத்தம் சொட்டிக்கொண்டிருந்த காட்டுக் கழுதையின் பின் சப்பையை (அன்பளிப்பாக வழங்கினார்கள்)” என்று இடம் பெற்றுள்ளது. ஷுஅபா (ரஹ்) அவர்களது மற்றோர் அறிவிப்பில் “நபி (ஸல்) அவர்களுக்குக் காட்டுக் கழுதையின் விலாப் பகுதி அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அவர்கள் அதை ஏற்க மறுத்துவிட்டார்கள்” என்று வந்துள்ளது.

Book : 15