🔗

முஸ்லிம்: 2253

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

أَرْبَعٌ كُلُّهُنَّ فَاسِقٌ، يُقْتَلْنَ فِي الْحِلِّ وَالْحَرَمِ: الْحِدَأَةُ، وَالْغُرَابُ، وَالْفَأْرَةُ، وَالْكَلْبُ الْعَقُورُ “

قَالَ: فَقُلْتُ لِلْقَاسِمِ: أَفَرَأَيْتَ الْحَيَّةَ؟ قَالَ: «تُقْتَلُ بِصُغْرٍ لَهَا»


பாடம்: 9

இஹ்ராம் கட்டியவர்களும் மற்றவர்களும் புனித (ஹரம்) எல்லைக்குள்ளும் வெளியேயும் கொல்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ள (தொல்லை தரும்) உயிரினங்கள்.

2253. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான்கு (வகை) உயிரினங்கள் தீங்கிழைப்பவை ஆகும். அவை புனித (ஹரம்) எல்லையிலும் வெளியிலும் கொல்லப்படும். (அவையாவன:) பருந்து, (நீர்க்)காகம், எலி, வெறிநாய்.

இதை நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான உபைதுல்லாஹ் பின் மிக்ஸம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

நான் (இந்த ஹதீஸை எனக்கு அறிவித்த) காஸிம் பின் முஹம்மத் பின் அபூபக்ர் அஸ்ஸித்தீக் (ரஹ்) அவர்களிடம், “பாம்பைப் பற்றி தாங்கள் என்ன கூறுகிறீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “அது அற்பமாக (அடித்து)க் கொல்லப்படும்” என்றார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம்: 15