أَنَّهَا حَاضَتْ بِسَرِفَ فَتَطَهَّرَتْ بِعَرَفَةَ فَقَالَ لَهَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يُجْزِئُ عَنْكِ طَوَافُكِ بِالصَّفَا وَالْمَرْوَةِ، عَنْ حَجِّكِ وَعُمْرَتِكِ»
2320. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(மக்காவிற்கு அருகிலுள்ள) “சரிஃப்” எனும் இடத்தில் எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது. “அரஃபா”வில் தூய்மை அடைந்தேன். அப்போது என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நீ ஸஃபா மற்றும் மர்வாவில் சுற்றி (சயீ) வந்ததே உனது ஹஜ்ஜுக்கும் உம்ராவிற்கும் போதுமானதாகிவிட்டது” என்றார்கள்.
Book : 15