«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَرَهُ أَنْ يُرْدِفَ عَائِشَةَ، فَيُعْمِرَهَا مِنَ التَّنْعِيمِ»
2322. அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் என்னிடம் (என் சகோதரி) ஆயிஷா (ரலி) அவர்களை எனது வாகனத்தில் எனக்குப் பின்னால் உட்காரவைத்து (அழைத்துச் சென்று) “தன்ஈமி”ல் உம்ரா மேற்கொள்ளச் செய்யுமாறு உத்தரவிட்டார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
Book : 15