أَنَّ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا، فِي حَجَّةِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَهَلَّتْ بِعُمْرَةٍ، وَسَاقَ الْحَدِيثَ بِمَعْنَى حَدِيثِ اللَّيْثِ، وَزَادَ فِي الْحَدِيثِ: قَالَ: وَكَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلًا سَهْلًا، إِذَا هَوِيَتِ الشَّيْءَ تَابَعَهَا عَلَيْهِ، فَأَرْسَلَهَا مَعَ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرٍ فَأَهَلَّتْ بِعُمْرَةٍ مِنَ التَّنْعِيمِ. قَالَ مَطَرٌ: قَالَ أَبُو الزُّبَيْرِ: فَكَانَتْ عَائِشَةُ إِذَا حَجَّتْ صَنَعَتْ كَمَا صَنَعَتْ مَعَ نَبِيِّ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
2324. மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் “ஆயிஷா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் செய்த ஹஜ்ஜின்போது உம்ராவிற்காக “இஹ்ராம்” கட்டினார்கள்” என்று ஹதீஸ் தொடங்குகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன. மேலும் அதில், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இதமாக நடந்துகொள்ளும் மனிதராக இருந்தார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள் ஒன்றை ஆசைப்பட்டபோது, அவரது வழியிலேயே அவரை விட்டுவிட்டார்கள். அதனால்தான், அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ர் (ரலி) அவர்களுடன் ஆயிஷா (ரலி) அவர்களை “தன்ஈமி”ல் உம்ராவிற்காக “இஹ்ராம்” கட்டச் செய்தார்கள்” என அதிகப்படியாகவும் இடம்பெற்றுள்ளது.
அறிவிப்பாளர் அபுஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள், “எனவே, ஆயிஷா (ரலி) அவர்கள் ஹஜ் செய்யும்போது, நபி (ஸல்) அவர்களுடன் அவர்கள் செய்ததைப் போன்றே செய்வார்கள்” என்று கூறியதாகவும் இடம்பெற்றுள்ளது.
Book : 15