أَمَرَنَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمَّا أَحْلَلْنَا، أَنْ نُحْرِمَ إِذَا تَوَجَّهْنَا إِلَى مِنًى، قَالَ: فَأَهْلَلْنَا مِنَ الْأَبْطَحِ
2326. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் இஹ்ராமிலிருந்து விடுபட்டு, (துல்ஹஜ் எட்டாவது நாளில்) மினாவை நோக்கிச் செல்லும் போது (ஹஜ்ஜுக்காக) “இஹ்ராம்” கட்டி, தல்பியா சொல்லுமாறு நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள். எனவே, நாங்கள் (மக்காவிற்கு அருகிலுள்ள) “அல்அப்தஹ்” எனுமிடத்தில் (ஹஜ்ஜுக்காக) “இஹ்ராம்” கட்டி, “தல்பியா” சொன்னோம்.
Book : 15