🔗

முஸ்லிம்: 2404

ஹதீஸின் தரம்: விபரம் கீழே


பாடம் : 35 நபி (ஸல்) அவர்கள் செய்த உம்ராக்களின் எண்ணிக்கையும் காலமும்.

2404. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நான்கு உம்ராக்கள் செய்தார்கள். தமது ஹஜ்ஜுடன் செய்த உம்ராவைத் தவிர மற்ற அனைத்தையும் துல்கஅதா மாதத்திலேயே அவர்கள் செய்தார்கள்; 1. “ஹுதைபியாவிலிருந்து” அல்லது “ஹுதைபியா ஒப்பந்தம் நடந்தபோது” துல்கஅதா மாதத்தில் செய்த உம்ரா. 2. அடுத்த ஆண்டு துல்கஅதா மாதத்தில் செய்த உம்ரா. 3. ஹுனைன் போரில் கிடைத்த போர்ச் செல்வங்களைப் பங்குவைத்த இடமான ஜிஃரானாவிலிருந்து துல்கஅதா மாதத்தில் செய்த உம்ரா. 4. அவர்கள் தமது ஹஜ்ஜுடன் செய்த உம்ரா (ஆகிய நான்குமே அவை).

– கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் அனஸ் (ரலி) அவர்களிடம் “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எத்தனை ஹஜ் செய்தார்கள்?” என்று கேட்டேன். அதற்கு, “அவர்கள் ஒரேயொரு ஹஜ் மட்டுமே செய்தார்கள்; நான்கு உம்ராக்கள் செய்தார்கள்” என்று விடையளித்தார்கள். மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.

Book : 15