رَأَيْتُ الْأَصْلَعَ يَعْنِي عُمَرَ بْنَ الْخَطَّابِ يُقَبِّلُ الْحَجَرَ وَيَقُولُ: «وَاللهِ، إِنِّي لَأُقَبِّلُكَ، وَإِنِّي أَعْلَمُ أَنَّكَ حَجَرٌ، وَأَنَّكَ لَا تَضُرُّ وَلَا تَنْفَعُ، وَلَوْلَا أَنِّي رَأَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَبَّلَكَ مَا قَبَّلْتُكَ» وَفِي رِوَايَةِ الْمُقَدَّمِيِّ وَأَبِي كَامِلٍ رَأَيْتُ الْأُصَيْلِعَ
2437. அப்துல்லாஹ் பின் சர்ஜிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
முன்தலை வழுக்கையானவர் (அதாவது உமர் (ரலி) அவர்கள்), ஹஜருல் அஸ்வதை முத்தமிடும் போது, “அல்லாஹ்வின் மீதாணையாக! நான் உன்னை முத்தமிடுகிறேன். நீ தீங்கோ நன்மையோ செய்ய முடியாத ஒரு கல் என்பதை நான் அறிவேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உன்னை முத்தமிடுவதை நான் கண்டிராவிட்டால் உன்னை முத்தமிட்டிருக்கமாட்டேன்”என்று கூறியதை நான் பார்த்தேன்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் முஹம்மத் பின் அபீபக்ர் அல்முகத்தமீ, அபூகாமில் (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில் “சின்ன வழுக்கத் தலையரை நான் பார்த்தேன்” என ஹதீஸ் தொடங்குகிறது.
Book : 15