🔗

முஸ்லிம்: 2438

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

رَأَيْتُ عُمَرَ يُقَبِّلُ الْحَجَرَ، وَيَقُولُ: «إِنِّي لَأُقَبِّلُكَ وَأَعْلَمُ أَنَّكَ حَجَرٌ، وَلَوْلَا أَنِّي رَأَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُقَبِّلُكَ لَمْ أُقَبِّلْكَ»


2438. ஆபிஸ் பின் ரபீஆ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

உமர் (ரலி) அவர்கள் ஹஜருல் அஸ்வதை முத்தமிட்டுவிட்டு, “நான் உன்னை முத்தமிடுகிறேன்; நீ ஒரு கல் என்பதை நான் அறிவேன்; அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உன்னை முத்தமிடுவதை நான் கண்டிராவிட்டால் நான் உன்னை முத்தமிட்டிருக்க மாட்டேன்” என்று கூறியதை நான் கண்டேன்.

இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

Book : 15