أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «طَافَ فِي حَجَّةِ الْوَدَاعِ عَلَى بَعِيرٍ، يَسْتَلِمُ الرُّكْنَ بِمِحْجَنٍ»
பாடம் : 42
ஒட்டகம் முதலான வாகனப் பிராணிகள் மீதமர்ந்து தவாஃப் செய்யலாம்; வாகனத்திலிருப்பவர் முனை வளைந்த கைத்தடி போன்றவற்றால் ஹஜருல் அஸ்வதைத் தொ(ட்டு முத்தமி)டலாம்.
2440. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “விடைபெறும்” ஹஜ்ஜின்போது ஒட்டகத்தின் மீதமர்ந்து தவாஃப் செய்தார்கள். அப்போது,முனை வளைந்த கைத்தடியால் ஹஜருல் அஸ்வதைத் தொட்(டு, முத்தமிட்)டார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
Book : 15