«مَنْ صَبَرَ عَلَى لَأْوَائِهَا وَشِدَّتِهَا، كُنْتُ لَهُ شَهِيدًا أَوْ شَفِيعًا يَوْمَ الْقِيَامَةِ» يَعْنِي الْمَدِينَةَ
2670. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அதன் (அதாவது மதீனாவின்) இடர்பாடுகளையும் கஷ்ட நஷ்டங்களையும் சகித்துக் கொண்டவருக்காக மறுமை நாளில் நான் சான்றுரைப்பவனாக, அல்லது பரிந்துரைப்பவனாக இருப்பேன்.- இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
Book : 15