«مَا بَيْنَ بَيْتِي وَمِنْبَرِي رَوْضَةٌ مِنْ رِيَاضِ الْجَنَّةِ»
பாடம் : 92
(நபியவர்களின்) கப்றுக்கும் மிம்பருக்கும் இடைப்பட்ட பகுதி, சொர்க்கப் பூஞ்சோலைகளில் ஒரு பூஞ்சோலையாகும்.
2687. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எனது இல்லத்திற்கும் எனது சொற்பொழிவு மேடை(மிம்பரு)க்கும் இடைப்பட்ட பகுதியானது, சொர்க்கத்துப் பூஞ்சோலைகளில் ஒரு பூஞ்சோலையாகும்.
இதை அப்துல்லாஹ் பின் ஸைத் அல் அன்சாரி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
Book : 15