🔗

முஸ்லிம்: 2861

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

أَنَّ عَمَّهَا مِنَ الرَّضَاعَةِ يُسَمَّى أَفْلَحَ. اسْتَأْذَنَ عَلَيْهَا فَحَجَبَتْهُ، فَأَخْبَرَتْ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ. فَقَالَ لَهَا: «لَا تَحْتَجِبِي مِنْهُ، فَإِنَّهُ يَحْرُمُ مِنَ الرَّضَاعَةِ مَا يَحْرُمُ مِنَ النَّسَبِ»


2861. உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஆயிஷா (ரலி) அவர்கள் என்னிடம், “என் பால்குடித் தந்தையின் சகோதரர் அஃப்லஹ் (ரலி) அவர்கள் என் வீட்டிற்குள் நுழைவதற்கு அனுமதி கேட்டார். நான் அவருக்கு (அனுமதி அளிக்காமல்) திரையிட்டுக் கொண்டேன். பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இதைத் தெரிவித்தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், “நீ அவரிடம் திரையிட்டு (மறைத்து)க்கொள்ள வேண்டாம். ஏனெனில், இரத்த உறவால் எந்த உறவுகளெல்லாம் (மணமுடிக்கத்தகாத) நெருங்கிய உறவுகளாக ஆகுமோ, அந்த உறவுகளெல்லாம் பால்குடி உறவாலும் நெருங்கிய உறவுகளாகிவிடும்” என்று கூறினார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

Book : 17