أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تَزَوَّجَهَا، وَذَكَرَ أَشْيَاءَ هَذَا فِيهِ، قَالَ: «إِنْ شِئْتِ أَنْ أُسَبِّعَ لَكِ، وَأُسَبِّعَ لِنِسَائِي، وَإِنْ سَبَّعْتُ لَكِ، سَبَّعْتُ لِنِسَائِي»
2895. அப்துல் வாஹித் பின் அய்மன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அபூபக்ர் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் உம்மு சலமா (ரலி) அவர்களிடமிருந்து பல விஷயங்களை அறிவித்துள்ளார்கள். அவற்றில் (பின்வரக்கூடிய) இதுவும் ஒன்று: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உம்மு சலமா (ரலி) அவர்களை மணந்தார்கள். (அப்போது) அவர்களிடம், “நீ விரும்பினால் நான் உன்னிடமும் ஏழு நாட்கள் தங்குகிறேன்; (அதைப் போன்று) என்னுடைய மற்றத் துணைவியரிடமும் ஏழு நாட்கள் தங்குவேன்” என்று கூறினார்கள்.
Book : 17