🔗

முஸ்லிம்: 2959

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

دَخَلْتُ عَلَى فَاطِمَةَ بِنْتِ قَيْسٍ فَسَأَلْتُهَا عَنْ قَضَاءِ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَيْهَا، فَقَالَتْ: طَلَّقَهَا زَوْجُهَا الْبَتَّةَ، فَقَالَتْ: فَخَاصَمْتُهُ إِلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي السُّكْنَى وَالنَّفَقَةِ، قَالَتْ: «فَلَمْ يَجْعَلْ لِي سُكْنَى، وَلَا نَفَقَةً، وَأَمَرَنِي أَنْ أَعْتَدَّ فِي بَيْتِ ابْنِ أُمِّ مَكْتُومٍ»

– وحَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، أَخْبَرَنَا هُشَيْمٌ، عَنْ حُصَيْنٍ، وَدَاوُدَ، وَمُغِيرَةَ، وَإِسْمَاعِيلَ، وَأَشْعَثَ، عَنِ الشَّعْبِيِّ، أَنَّهُ قَالَ: دَخَلْتُ عَلَى فَاطِمَةَ بِنْتِ قَيْسٍ، بِمِثْلِ حَدِيثِ زُهَيْرٍ، عَنْ هُشَيْمٍ


2959. ஷஅபீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்களிடம் சென்று, அவர்களுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அளித்த தீர்ப்பைக் குறித்துக் கேட்டேன். அதற்கு ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்கள், “என்னை என் கணவர் ஒட்டுமொத்த தலாக் சொல்லிவிட்டார். (“இத்தா”க் கால) ஜீவனாம்சம் மற்றும் உறைவிடம் விஷயத்தில் அவர்மீது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நான் வழக்கு தொடுத்தேன். ஆனால், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்கு உறைவிடமோ ஜீவனாம்சமோ வழங்கச் செய்யவில்லை. என்னை (என் தந்தையின் சகோதரர் புதல்வர்) இப்னு உம்மி மக்தூம் (ரலி) அவர்களது இல்லத்தில் “இத்தா” மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்கள்” என்று கூறினார்கள்.


இந்த ஹதீஸ் ஏழு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

மேற்கண்ட தகவல் ஷஅபீ (ரஹ்) அவர்களிடமிருந்தே மேலும் ஐந்து அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

அத்தியாயம்: 18