🔗

முஸ்லிம்: 3163

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி


3163. ஹதீஸ் எண்-3162 இல் வரும் ஹதீஸ் ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் ஐந்து அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

அவற்றில் அம்ர் அன்னாகித் (ரஹ்) அவர்கள், அம்மார் பின் முஹம்மத் (ரஹ்) அவர்களிடமிருந்து அறிவிக்கும் அறிவிப்பிலும், அபூகுரைப் (ரஹ்) அவர்கள் அபூமுஆவியா (ரஹ்) அவர்களிடமிருந்து அறிவிக்கும் அறிவிப்பிலும் “உம்மு முபஷ்ஷிர் (ரலி) அவர்கள் கூறினார்கள்” என்று இடம் பெற்றுள்ளது.


முஹம்மத் பின் ஃபுளைல் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் “ஸைத் பின் ஹாரிஸா (ரலி) அவர்களின் துணைவியார் கூறினார்” என இடம்பெற்றுள்ளது.


அபூமுஆவியா (ரஹ்) அவர்களிடமிருந்து இப்னு இஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் அறிவிக்கும் அறிவிப்பில் சில நேரங்களில் “உம்மு முபஷ்ஷிர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து கூறினார்கள்” எனவும், வேறு சில நேரங்களில் அவ்வாறு (உம்மு முபஷ்ஷிர் பெயர்) கூறாமலும் இடம்பெற்றுள்ளது.

இவர்கள் அனைவருமே மேற்கண்ட ஹதீஸ் எண்-3162 இல் உள்ளதைப் போன்றே அறிவித்துள்ளனர்.


அத்தியாயம்: 22