🔗

முஸ்லிம்: 3469

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

خَطَبَنَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ النَّحْرِ، فَقَالَ: «أَيُّ يَوْمٍ هَذَا؟» وَسَاقُوا الْحَدِيثَ بِمِثْلِ حَدِيثِ ابْنِ عَوْنٍ، غَيْرَ أَنَّهُ لَا يَذْكُرُ وَأَعْرَاضَكُمْ، وَلَا يَذْكُرُ ثُمَّ انْكَفَأَ إِلَى كَبْشَيْنِ وَمَا بَعْدَهُ، وَقَالَ فِي الْحَدِيثِ: «كَحُرْمَةِ يَوْمِكُمْ هَذَا، فِي شَهْرِكُمْ هَذَا، فِي بَلَدِكُمْ هَذَا، إِلَى يَوْمِ تَلْقَوْنَ رَبَّكُمْ، أَلَا هَلْ بَلَّغْتُ؟» قَالُوا: نَعَمْ، قَالَ: «اللهُمَّ اشْهَدْ»


3469. மேற்கண்ட ஹதீஸ் அபூபக்ரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் ஆறு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

அவற்றில், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நஹ்ருடைய (துல்ஹஜ் பத்தாவது) நாளில் எங்களுக்கு உரையாற்றினார்கள். அப்போது “இது எந்த நாள்?” என்று கேட்டார்கள்…” என ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன. ஆயினும், அவற்றில் “உங்கள் மானம்” என்பதும் “பிறகு இரு செம்மறியாட்டு கடாக்களின் பக்கம் திரும்பினார்கள்” என்பதும் அதற்குப் பின்னுள்ள குறிப்புகளும் இடம் பெறவில்லை.

அவற்றில் “உங்களது புனிதமிக்க இந்த நகரத்தில் உங்களின் புனிதமிக்க இந்த மாதத்தில் இந்த நாள் எந்த அளவுக்குப் புனிதமானதோ அதைப் போன்றே (உங்கள் உயிர்களும் உடைமைகளும்) நீங்கள் உங்கள் இறைவனைச் சந்திக்கும் நாள்வரை உங்களுக்குப் புனிதமானவையாகும்” என்று கூறிவிட்டு “நான் (இறைச்செய்திகளை உங்களிடம்) சேர்த்துவிட்டேனா?” என்று கேட்டார்கள். நாங்கள் “ஆம்” என்றோம். அவர்கள் “இறைவா! நீயே இதற்குச் சாட்சியாக இரு” என்று கூறினார்கள் என்றும் இடம்பெற்றுள்ளது.

Book : 28