«أَلَا أُخْبِرُكُمْ بِخَيْرِ الشُّهَدَاءِ الَّذِي يَأْتِي بِشَهَادَتِهِ قَبْلَ أَنْ يُسْأَلَهَا»
பாடம் : 9
சாட்சிகளில் சிறந்தவர்.
3542. ஸைத் பின் காலித் அல்ஜுஹனீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், “சாட்சிகளில் சிறந்தவர் யாரென உங்களுக்கு நான் சொல்லட்டுமா? சாட்சியளிக்கும்படி கோராமலேயே தாமாக முன்வந்து சாட்சியமளிப்பவரே அவர்” என்று கூறினார்கள்.
Book : 30