🔗

முஸ்லிம்: 3651

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ يَوْمَ فَتْحِ مَكَّةَ: «لَا يُقْتَلُ قُرَشِيٌّ صَبْرًا بَعْدَ هَذَا الْيَوْمِ إِلَى يَوْمِ الْقِيَامَةِ»


பாடம் : 33

மக்கா வெற்றிக்குப் பின் எந்தக் குறைஷியும் கட்டிவைத்துத் தாக்கப்படும் நிலை வராது.

3651. முதீஉ பின் அல்அஸ்வத் பின் ஹாரிஸா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் மக்கா வெற்றி நாளில், “இன்றைய தினத்துக்குப் பிறகு மறுமை நாள்வரை குறைஷியர் எவரும் கட்டிவைத்துத் தாக்கப்படும் நிலை ஏற்படாது” என்று கூறியதை நான் கேட்டேன்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

Book : 32