🔗

முஸ்லிம்: 3768

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«مَنْ رَأَى مِنْ أَمِيرِهِ شَيْئًا يَكْرَهُهُ فَلْيَصْبِرْ، فَإِنَّهُ مَنْ فَارَقَ الْجَمَاعَةَ شِبْرًا، فَمَاتَ، فَمِيتَةٌ جَاهِلِيَّةٌ»


3768. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தம் (ஆட்சித்) தலைவரிடம் (மார்க்க விஷயத்தில் குறை) எதையேனும் கண்டு அதை வெறுப்பவர், பொறுமையைக் கடைப்பிடிக்கட்டும். ஏனெனில், ஒருவர் (ஒன்றுபட்டக்) கட்டமைப்பிலிருந்து ஒரு சாண் அளவுக்குப் பிரிந்து இறந்துபோனாலும் அவர் அறியாமைக் கால மரணத்தையே தழுவுகிறார்.

இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

Book : 33