«لَا فَرَعَ، وَلَا عَتِيرَةَ»، زَادَ ابْنُ رَافِعٍ فِي رِوَايَتِهِ، وَالْفَرَعُ: أَوَّلُ النِّتَاجِ كَانَ يُنْتَجُ لَهُمْ فَيَذْبَحُونَهُ
பாடம் : 6
ஆடு அல்லது ஒட்டகத்தின் முதலாவது குட்டியைப் பலியிடுவதும் (அல் ஃபரஉ), ரஜப் மாதத்தின் முதல் பத்து நாட்களில் பிராணிகளைப் பலியிடுவதும் (அல்அத்தீரா).
3996. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(இனி,) தலைக் குட்டி(யைப் பலியிடும் அறியாமைக் காலச் செய்கை)யும் இல்லை; (ரஜப் மாதத்தின் முதல் பத்து நாட்களில்) பிராணிகளைப் பலியிடுதலும் இல்லை.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் ஆறு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் முஹம்மத் பின் ராஃபிஉ (ரஹ்) அவர்களது அறிவிப்பில் “(ஆடு மற்றும் ஒட்டகம் ஆகியவை ஈனும்) முதலாவது குட்டி “ஃபரஉ” ஆகும். அதை (அறியாமைக் கால) மக்கள் பலியிட்டுவந்தனர்” என்று இடம்பெற்றுள்ளது.
Book : 35