«أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنِ الدُّبَّاءِ وَالْمُزَفَّتِ أَنْ يُنْبَذَ فِيهِ»
பாடம் : 6
தார் பூசப்பட்ட பாத்திரம், சுரைக்காய் குடுவை, மண் சாடி, பேரீச்ச மரத்தின் அடிப்பாகத்தைக் குடைந்து தயாரிக்கப்பட்ட பாத்திரம் ஆகியவற்றில் பானங்களை ஊற்றிவைப்பதற்கு விதிக்கப்பெற்றிருந்த தடையும், பின்னர் அச்சட்டம் காலாவதியாக்கப் பட்டதும், போதையூட்டக்கூடியதாக மாறாத வரை எல்லாப் பாத்திரங்களும் தற்போது அனுமதிக்கப்பட்டவையே என்பது பற்றிய விளக்கமும்.
4033. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சுரைக்காய் குடுவை, தார் பூசப்பட்ட பாத்திரம் ஆகியவற்றில் பானங்களை ஊற்றிவைக்க வேண்டாமெனத் தடைவிதித்தார்கள்.
இதை இப்னு ஷிஹாப் அஸ்ஸஹ்ரீ (ரஹ்) அவர்கள் லைஸ் (ரஹ்) அவர்களிடமிருந்து அறிவிக்கிறார்கள்.
Book : 36