🔗

முஸ்லிம்: 4061

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

قَدِمَ وَفْدُ عَبْدِ الْقَيْسِ عَلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَسَأَلُوهُ عَنِ الْأَشْرِبَةِ، «فَنَهَاهُمْ عَنِ الدُّبَّاءِ وَالنَّقِيرِ وَالْحَنْتَمِ»، فَقُلْتُ لَهُ: يَا أَبَا مُحَمَّدٍ، وَالْمُزَفَّتِ؟ وَظَنَنَّا أَنَّهُ نَسِيَهُ، فَقَالَ: «لَمْ أَسْمَعْهُ يَوْمَئِذٍ مِنْ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ، وَقَدْ كَانَ يَكْرَهُ»


4061. சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் இந்தச் சொற்பொழிவு மேடை -அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மிம்பரை நோக்கி சைகை செய்கிறார்- அருகில், “அப்துல் கைஸ் தூதுக் குழுவினர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து குடிபானங்கள் பற்றிக் கேட்டனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சுரைக்காய் குடுவை,பேரீச்ச மரத்தின் அடிப்பாகத்தைக் குடைந்து தயாரிக்கப்பட்ட பாத்திரம் மற்றும் மண் சாடி ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டாமென அவர்களுக்குத் தடை விதித்தார்கள்” என்று கூறியதை நான் கேட்டேன்.

இந்த ஹதீஸின் அறிவிப்பாளரான அப்துல் காலிக் பின் சலமா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நான் சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்) அவர்களிடம், “அபூமுஹம்மதே! தார் பூசப்பட்ட பாத்திரத்தையுமா (பயன்படுத்தவேண்டாம் எனத் தடை செய்தார்கள்)?” என்று கேட்டேன். அதை அவர்கள் மறந்துவிட்டார்கள் என்று நாங்கள் கருதினோம். (அதனால்தான் அவ்வாறு கேட்டோம்).

அதற்கு சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்) அவர்கள், “அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அன்று அவ்வாறு கூறியதை நான் கேட்கவில்லை. (எனினும்,) அவர்கள் (தார் பூசப்பட்ட பாத்திரத்தை) வெறுத்துவந்தார்கள்” என்று பதிலளித்தார்கள்.

Book : 36