«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى أَنْ يُتَنَفَّسَ فِي الْإِنَاءِ»
பாடம்: 16
(பருகும்) பாத்திரத்தினுள் மூச்சு விடுவது வெறுக்கத்தக்கதாகும். பாத்திரத்திற்கு வெளியே மூன்று முறை மூச்சு விட்டுப் பருகுவது விரும்பத்தக்கதாகும்.
4124. அபூகதாதா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (பருகும்) பாத்திரத்தினுள் மூச்சு விட வேண்டாமெனத் தடை செய்தார்கள்.
அத்தியாயம்: 36