«إِنِّي لَأَعْرِفُ حَجَرًا بِمَكَّةَ كَانَ يُسَلِّمُ عَلَيَّ قَبْلَ أَنْ أُبْعَثَ إِنِّي لَأَعْرِفُهُ الْآنَ»
4574. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் மக்காவிலுள்ள கல் ஒன்றை அறிவேன். நான் நபியாக நியமிக்கப்படுவதற்கு முன் அது எனக்கு முகமன் (ஸலாம்) சொல்லி வந்தது. நிச்சயமாக இப்போதும் அதை நான் அறிவேன்.
அறிவிப்பவர்: ஜாபிர் பின் ஸமுரா (ரலி)
அத்தியாயம்: 43