دَخَلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَيْنَا، وَمَا هُوَ إِلَّا أَنَا وَأُمِّي وَأُمُّ حَرَامٍ، خَالَتِي. فَقَالَتْ أُمِّي: يَا رَسُولَ اللهِ خُوَيْدِمُكَ، ادْعُ اللهَ لَهُ، قَالَ فَدَعَا لِي بِكُلِّ خَيْرٍ، وَكَانَ فِي آخِرِ مَا دَعَا لِي بِهِ أَنْ قَالَ: «اللهُمَّ أَكْثِرْ مَالَهُ وَوَلَدَهُ، وَبَارِكْ لَهُ فِيهِ»
4888. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் (எங்கள் இல்லத்திற்கு) வந்தார்கள். அப்போது அங்கு நானும் என் தாயாரும் என் தாயின் சகோதரி உம்மு ஹராம் (ரலி) அவர்களுமே இருந்தோம். அப்போது என் தாயார், “அல்லாஹ்வின் தூதரே! (இதோ) உங்கள் அன்பு சேவகர் (அனஸ்). அவருக்காகப் பிரார்த்தியுங்கள்” என்று கேட்டுக்கொண்டார்.
அப்போது நபி (ஸல்) அவர்கள் எனக்காக எல்லாவித நலன்களும் வேண்டிப் பிரார்த்தித்தார்கள். அவர்கள் தமது பிரார்த்தனையின் முடிவில், “இறைவா! அனஸின் செல்வத்தையும் குழந்தைகளையும் அதிகமாக்கி, அ(வருக்கு நீ அளித்திருப்ப)தில் வளம் சேர்ப்பாயாக!” என்று எனக்காக வேண்டினார்கள்.
Book : 44