🔗

முஸ்லிம்: 4916

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

أَنَّ أَبَا سُفْيَانَ، أَتَى عَلَى سَلْمَانَ، وَصُهَيْبٍ، وَبِلَالٍ فِي نَفَرٍ، فَقَالُوا: وَاللهِ مَا أَخَذَتْ سُيُوفُ اللهِ مِنْ عُنُقِ عَدُوِّ اللهِ مَأْخَذَهَا، قَالَ فَقَالَ أَبُو بَكْرٍ: أَتَقُولُونَ هَذَا لِشَيْخِ قُرَيْشٍ وَسَيِّدِهِمْ؟، فَأَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَخْبَرَهُ، فَقَالَ: «يَا أَبَا بَكْرٍ لَعَلَّكَ أَغْضَبْتَهُمْ، لَئِنْ كُنْتَ أَغْضَبْتَهُمْ، لَقَدْ أَغْضَبْتَ رَبَّكَ» فَأَتَاهُمْ أَبُو بَكْرٍ فَقَالَ: يَا إِخْوَتَاهْ أَغْضَبْتُكُمْ؟ قَالُوا: لَا يَغْفِرُ اللهُ لَكَ يَا أَخِي


பாடம் : 42

சல்மான் (ரலி), ஸுஹைப் (ரலி), பிலால் (ரலி) ஆகியோரின் சிறப்புகள்.

4916. ஆயித் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

சல்மான், ஸுஹைப், பிலால் (ரலி) ஆகியோர் கொண்ட ஒரு குழுவினரிடம் (அது வரை இஸ்லாத்தை எற்காதிருந்த) அபூசுஃப்யான் வந்தபோது, அக்குழுவினர் “அல்லாஹ்வின் மீதாணையாக! இந்த இறைவிரோதியின் கழுத்தில் (இன்னும்) உரிய முறையில் இறைவனின் வாட்கள் பதம் பார்க்கவில்லையே!” என்று கூறினர்.

அப்போது அவர்களிடம் அபூபக்ர் (ரலி) அவர்கள், “குறைஷியரில் மூத்தவரும் அவர்களின் தலைவருமான ஒருவரைப் பார்த்தா இவ்வாறு கூறுகிறீர்கள்!” என்று (கடிந்து) கூறினார்கள்.

பிறகு நபி (ஸல்) அவர்களிடம் சென்று அதைப் பற்றி அபூபக்ர் (ரலி) அவர்கள் தெரிவித்தபோது, “அபூபக்ரே! நீங்கள் அ(க்குழுவிலுள்ள)வர்களைக் கோபப்படுத்தியிருப்பீர்கள் போலும்! அவர்களை நீங்கள் கோபப்படுத்தியிருந்தால், உங்கள் இறைவனை நீங்கள் கோபப்படுத்திவிட்டீர்கள்” என்று சொன்னார்கள்.

ஆகவே, அவர்களிடம் அபூபக்ர் (ரலி) அவர்கள் வந்து, “என் சகோதரர்களே! நான் உங்களைக் கோப்படுத்திவிட்டேனா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், “இல்லை, எங்கள் அருமைச் சகோதரரே! அல்லாஹ் உங்களை மன்னிப்பானாக!” என்று கூறினார்கள்.

Book : 44