«كَانَ إِحْدَانَا إِذَا كَانَتْ حَائِضًا أَمَرَهَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَتَأْتَزِرُ بِإِزَارٍ ثُمَّ يُبَاشِرُهَا»
மாதவிடாய்
பாடம் : 1
மாதவிடாயில் உள்ள மனைவியைக் கீழாடைக்கு மேல் அணைத்துக் கொள்வது.
492. (நபி (ஸல்) அவர்களின் துணைவியரில் ஒருவரான) ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
எங்களில் ஒருவருக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும்போது கீழாடை கட்டிக்கொள்ளுமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவார்கள். (ஆடை கட்டிக்கொண்ட) பின்னர் அணைத்துக்கொள்வார்கள்.
இதை அஸ்வத் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
Book : 3